Questions? +1 (202) 335-3939 Login
Trusted News Since 1995
A service for global professionals · Thursday, March 28, 2024 · 699,460,896 Articles · 3+ Million Readers

விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு நாளை புதன்கிழமை

LONDON, UNITED KINGDOM, October 21, 2020 /EINPresswire.com/ -- தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அசராங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை புதன்கிழமை வெளிவருகின்றது என நாடுகடந்த தமிழீழ அராசாங்கத்தின் பிரதமர் பணிமனை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நேரம் காலை 10:30 வழங்கப்பட இருக்கின்ற இர்தீர்ப்பு தொடர்பில், பிரித்தானியா நேரம் மாலை 4:15 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஊடக சந்திப்பொன்றினை நடத்த இருக்கின்றது. இதனை https://www.facebook.com/tgteofficial மற்றும் tgte.tv ஊடாக நேரடியாக காணமுடியும்.

இந்த வழக்கானது திறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது. திறந்த சாட்சியங்களின் விசாரணையின் போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்க்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.

இரகசிய விசாரணை போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Angus McCulloch Q.C and Rachel Tony. ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டவாளராக வாதிட்டிருந்தார்.

எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை எனச்சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2018ம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.

இதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.

விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களின் பேச்சு சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் இடையூறாக இருக்கின்றதென வாதிட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சுதந்திர அரசின் வடிவத்தில் பிரயோகிப்பதற்கு தடையாக உள்ளதோடு, சுதந்திர தமிழீழத்தினை இலக்காக கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகரீதியாக செயற்பாடுகளுக்கும் பெருந்தடையாக இது இருக்கின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது.

பிரித்தானியாவின் நியாயமற்ற விதத்திலான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரையினை, சிறிலங்கா அரசு தனது தமிழினஅழிப்பை, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் மறைத்துக் கொள்ளும் உபாயமாக கைக்கொள்கின்றது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

English: https://www.einpresswire.com/article/528834417/decision-of-the-appeal-against-ltte-ban-in-uk-is-tomorrow-wednesday-tgte

Transnational Government of Tamil Eelam
TGTE
+1 6142023377
email us here
Visit us on social media:
Facebook
Twitter

Powered by EIN Presswire


EIN Presswire does not exercise editorial control over third-party content provided, uploaded, published, or distributed by users of EIN Presswire. We are a distributor, not a publisher, of 3rd party content. Such content may contain the views, opinions, statements, offers, and other material of the respective users, suppliers, participants, or authors.

Submit your press release